
விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா – ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடி கட்டு, பேரழகன், சந்திரமுகி, திருட்டுபயலே பல திரைப்படங்களில் நடித்த மாளவிகா. அதன்பின் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சைக்கிளில் செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரே தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். தன்னுடைய விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு போர் வீராங்கனை போல விரைவில் மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.
...