
என் மகளை பார்க்க முடியவில்லை.. நடிகை ரேகா கண்ணீர்…
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரேகா. புன்னகை மன்னன், கடலோர கவிதைகள் ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். தற்போது மலையாளத்தில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.
இவரின் மகள் அனுஷா அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் கொரோனா பரவி வருவதால் அவரால் இந்தியாவுக்கு வரமுடியவில்லை. மேலும், மகளை பார்க்க செல்லலாம் என ரேகா நினைத்தாலும் அவருக்கும், அவரின் கணவருக்கும் விஷா கிடைக்கவில்லையாம். எனவே, தனது மகளை கடந்த ஒன்றரை வருடங்களாக நேரில் பார்க்க முடியவில்லை என கண்ணீர் விடுகிறார் ரேகா...
விரைவில் அவர் தன் மகளை சந்திப்பார் என நம்புவோம்....