
ரெக்கார்ட் செய்த வலிமை ஆன்லைன் முன்பதிவு…உற்சாகத்தில் திரையுலகினர்…..
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 2 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.
முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
கடந்த வருடம் கொரொனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டு பின் மாஸ்டர் வெளியாகி வசூலை வாரி குவித்து திரையுலகினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அப்போது தியேட்டரில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி இருப்பதால் அப்ப...