
அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் அந்த நடிகர்….
பாலிவுட்டின் கமல்ஹாசன் என அழைக்கப்படுபவர் அமீர்கான். நடிப்புக்கு தீனி போடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர். ஹாலிவுட் படமான Forrest Gump படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து லால் சிங் சட்டா என்கிற தலைப்பில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் அமீர்கான் கேட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை.
தற்போது அந்த வேடத்தில் தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது....