
ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் அந்நியன்! – பாலிவுட் கதாநாயகன் யார் தெரியுமா?
ஷங்கரின் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன். இப்படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தவறு செய்பவர்களை தண்டிக்கப்படுவார்கள் என்பதை மையகருத்தாக கொண்டு இப்படம் உருவானது.
பல வருடங்கள் கழித்து இப்படம் பாலிவுட்டில் மீண்டும் உருவாகவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவருகிறது. இப்படத்தில் விக்ரம் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கமலை வைத்து ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் ஏறக்குறைய கைவிடப்பட்டது. அதன்பின் ராம்சரணை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது....