
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர் படத்தில் தனுஷ்….பரபரக்கும் சினிமா உலகம்..
தமிழ் சினிமாவில் ஆடுகளம், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தவர் நடிகர் தனுஷ். பாலிவுட், ஹாலிவுட் என வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் ‘அட்ராங்கி ரே’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வருடம் வெளியாகி பல மில்லியன்களை வசூலித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தை இயக்கிய இயக்குனரின் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜோ ருசோ மற்றும் ஆண்டனி ருசோ என இருவர் இயக்கியிருந்தனர். தமிழ் , ஹிந்தி என எந்த மொழியிலும் இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....