
பீஸ்ட் பட டப்பிங் பணி.. ஜெட் வேகத்தில் நடிகர் விஜய்….
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே, நெல்சன் அவரை கட்டியணைத்து விடை கொடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் வைரலானது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அதாவது அப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வருகிற ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று வெளியிட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே முடிக்க விஜய் திட...