
விஜய்க்கே நடிப்பே வரல!…கொளுத்திப்போட்ட பீஸ்ட் பட நடிகர்….
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் படம் ஆஹா ஓஹோவென இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், திரைப்படமோ ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.
படம் வெளியான உடனேயே இப்படம் தொடர்பான ட்ரோல்கள் சமூகவலைத்தளங்களில் வர துவங்கியது. எனவே, பீஸ்ட் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. சன் பிக்சருக்கு இப்படம் ஒரு தோல்விப்படமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில், இப்படத்தில் தீவிரவாதியாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பீஸ்ட் படம் பற்றி கேள்வி கேட்டதுமே அவர் சிரித்துவிட்டார்.
இந்த திரைப்படத்தில் என்னை தூக்கிக்கொண்டு விஜய் செல்வது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கனமான பொருளை தூக்கினால் முகத்தில் அதற்கான முகபாவணை காட்ட வேண்டும். ஆனால், விஜய் அப்படி எதையுமே செய்யவில்லை.அவர் முகத்தில் எந...