
பிக்பாஸ் புகழ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ – முக்கிய அப்டேட்
பிக்பாஸ் சிசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் முகேன். மலேசிய தமிழரான இவர் இசைத்துறையில் ஆர்வம் உள்ளவர். நிறைய பாடல்களை பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
தற்போது கவின் என்பவரின் இயக்கத்தில் ‘வேலன்’ என்கிற படத்தில் அவர் நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் பற்றி பேசிய முகேன் ‘ஒரு அழகான காதலை நகைச்சுவையுடன் சொல்லும் கதை இது.
இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். என் அப்பாவாக பிரபு நடித்துள்ளார். நகைச்சுவைக்கு சூரி இருக்கிறர். அனுபவம் உள்ள கலைஞர்களுடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சி’ என அவர் கூறியுள்ளார்....