
பிக்பாஸ் நிகழ்ச்சியால் எந்த பலனும் இல்லை…சனம் ஷெட்டி ஓப்பன் டாக்…
கன்னடத்தில் சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழில் அம்புலி எனும் படத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்தார். இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் சனம் ஷெட்டி புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிறப்பாக விளையாடியும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரை ஆதரித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவரின் நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. அந்த படம் தொடர்பான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அவரிடம் ‘பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததா?’ என செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு ‘நான் என்னுடையை தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் கூறுகிறேன்...