
அமீர்கான் படத்தில் ஏன் நடிக்கவில்லை? – விஜய் சேதுபதி விளக்கம்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகமும் அவரை அழைத்து அங்கு நடிக்க வைக்கின்றனர்.
இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘பாரஸ்ட் கம்ப்’ ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வந்தது. ஆனால், அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. இதற்கு அவர் உடல் எடை அதிகம் கூடிவிட்டதுதான் காரணம் என செய்திகள் வெளியானது.
ஆனால், இதை விஜய்சேதுபதி மறுத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் என்னால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஊரடங்கிற்கு பின் 5 தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அப்படத்திற்கு தேதி ஒதுக்க முடியவில்லை. ஆனாலும், விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது’ என அவர் தெரிவித்தார்....