
விரைவில் ஃபர்ஸ்ட்லுக் – வலிமை அப்டேட் கொடுத்த போனிகபூர்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமீபத்தில், வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்த ரசிகரிடம் வலிமை பற்றிய முக்கிய அப்டேட்டை அஜித் கொடுத்தார். இந்த தகவலை அந்த ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தல அஜித்திடம் வலிமை அப்டேட் கேட்டேன். பிப்ரவரி மாத இறுதியில் வலிமை அப்டேட் வெளியாகும் என அஜித் என்னிடம் கூறினார் என அவர் தெரிவித்தார். அதோடு, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இதை வைத்து பார்க்கும் போது பிப்ரவரி மாத கடைசிக்கு பின் வலிமை படம் பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ‘வலிமை படத்தின் படப்பிட...