
துவங்காத படப்பிடிப்பு – சந்திரமுகி 2 டிராப்பா? – உண்மை நிலவரம் என்ன?…
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட் படமாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் 2ம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்போடு நின்று விட்டது. எனவே,சந்திரமுகி 2 டிராப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் பரவியது.
ஆனால், அதில் உண்மையில்லை. ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். எனவே, அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் கலந்து கொள்வார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது....