
சென்னையில் 18வது சர்வதேச திரைப்படவிழா – 17 தமிழ்படங்கள் தேர்வு
சென்னையில் இன்று 18வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. இதன் தொடக்க விழா இன்று காலை துவங்கியது. இந்த விழாவில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில், சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள், காட்பாதர், சியான்கள், சம் டே, கன்னி மாடம் உள்ளிட்ட 17 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்த திரைப்பட விழா 8 நாட்கள் நடைபெறவுள்ளது.
...