
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விக்ரம்.. திரையுலகினர் அதிர்ச்சி…
கொரோனா வைரஸுக்கு பொதுமக்கள் மட்டுமின்று எப்போதும் தங்களின் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நடிகர்கள், நடிகைகளே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என பலரும் பாதிக்கப்பட்டனர். தமிழிலும் பல முக்கிய நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டனர். சில நடிகர் மற்றும் இயக்குனர்கள் தங்களின் உயிரையும் இழந்தனர்.
இந்நிலையில், தமிழில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருந்த அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, வீட்டில் அவர் தன்னை தனிமை படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்....