web analytics
Thursday, November 24SOCIAL MEDIA

Tag: Cook with comali

குக் வித் கோமாளிக்கு விரைவில் டும் டும் டும்… பொண்ணு இவர்தான்!…..

குக் வித் கோமாளிக்கு விரைவில் டும் டும் டும்… பொண்ணு இவர்தான்!…..

News, Tamil News
சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உருவானது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் அவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடன் இருந்த நடிகர் அஸ்வின் நடித்த ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் அவருடன் இணைந்து புகழ் நடித்தார். இந்நிலையில், புகழ் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவது தெரியவந்துள்ளது. அவரின் பெயர் ரியா என்பதும் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் சிம்புவின் தீவிர ரசிகை என்பதும் தெரியவந்துள்ளது. இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் புகழ். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும் செய்திகள் உலா வருகிறது. ...
அடுத்த யோகிபாபுவா மாறிய புகழ்? – குவியும் பட வாய்ப்புகள்

அடுத்த யோகிபாபுவா மாறிய புகழ்? – குவியும் பட வாய்ப்புகள்

News, Tamil News
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியால் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். எனவே, இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அஜித் நடிக்கும் வலிமை படத்தில் சிறு வேடத்திலும், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் புகழ் நடிக்கவுள்ளார். தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபுவும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்தான். புகழும் அவரை போலவே தலை முடியை கொண்டிருப்பதால் யோகிபாபு போல அவரும் மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....