web analytics
Saturday, February 4SOCIAL MEDIA

Tag: danush

பேன் இண்டியா படத்தில் நடிகர் தனுஷ்…. இயக்குனர் யார் தெரியுமா?….

பேன் இண்டியா படத்தில் நடிகர் தனுஷ்…. இயக்குனர் யார் தெரியுமா?….

News, Tamil News
நடிகர் தனுஷ் ஏற்கனவே தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்கு வாத்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கவுள்ளார். இந்நிலையில், மீண்டும் ஒரு பேன் இண்டியா திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை ராக்கி மற்றும் சாணி காயிதம் படங்களை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு கேப்டன் மில்லர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1930ல் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இப்படம் உருவாகவுள்ளது....
மாறன் படத்தால் திரையுலகினருக்கு வந்த சோதனை….கறார் காட்டும் ஓடிடி நிறுவனங்கள்!…

மாறன் படத்தால் திரையுலகினருக்கு வந்த சோதனை….கறார் காட்டும் ஓடிடி நிறுவனங்கள்!…

News, Tamil News
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து டிஷ்னி ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாறன். இப்படம் வெளியான முதல் நாளே படம் நன்றாக இல்லை என எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. எனவே, ரசிகர்கள் அப்படத்தை ஓடிடியில் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் இப்படத்தை வாங்கிய டிஷ்னி ஹாட் ஸ்டாருக்கு பல கோடிகள் நஷ்டமாம். பொதுவாக பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர், அல்லது நடிகரின் முந்தை படத்தின் வெற்றி, இயக்குனரின் முந்தைய படத்தின் வெற்றி இதை வைத்தே ஓடிடி நிறுவனங்கள் ஒரு படத்தை தயாரிப்பாளரிடம் வாங்கி வந்தது. ஆனால், இப்படத்தின் தோல்வியால் இனிமேல் ஒரு திரைப்படத்தை பார்த்து நன்றாக இருந்தால் மட்டுமே வாங்குவது என்கிற முடிவுக்கு டிஷ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் வந்துள்ளதாம். எனவே, மாறன் திரைப்படத்தால் மற்ற படங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
தன் பேரிலிருந்து தனுஷ் பெயரை தூக்கிய ஐஸ்வர்யா!… யார் பேர் வச்சிருக்காங்க பாருங்க!…

தன் பேரிலிருந்து தனுஷ் பெயரை தூக்கிய ஐஸ்வர்யா!… யார் பேர் வச்சிருக்காங்க பாருங்க!…

News, Tamil News
நடிகர் தனுஷும் அவரின் மனைவி ஐஸ்வர்யாவும் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் அவர்கள் பிரிவதாக அறிவித்தனர். 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருவரையும் சேர்த்து வைக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அவை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடல் வீடியோவுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்க, ஐஸ்வர்யா நன்றி கூறினார். எனவே, இருவரும் மீண்டும் இணைவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருவரும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டிவிட்டரில் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிக...
ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது என்னடா புதுக்கதை!…

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது என்னடா புதுக்கதை!…

News, Song Video, Tamil News, Videos
நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளன. ஆனால், திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தவறான முடிவு எனவும், இருவரும் மீண்டும் இணையவேண்டும் எனவும் பலரும் கோரிக்க வைத்தனர். ஆனால், இருவரும் தங்கள் வழியில் நடக்க துவங்கிவிட்டனர். தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதற்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இந்த வீடியோ இன்று யுடியூப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து ‘எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். https://twit...
தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

News, Tamil News
தனுஷ் தமிழ் படம் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் என நடித்து வருகிறார். அவர் நடித்து வந்த ‘அட்ராங்கி ரே’ திரைப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனுஷ் நேரிடையாக ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. ஏற்கனவே, சேகர் கம்முலா என்கிற இயக்குனர் படத்தில்தான் தனுஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இயக்குனர் மாறியுள்ளார்.இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 9.36 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் கைவசம் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் ஆகிய படங்கள் இருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். ...
சல்லி சல்லியா நொறுக்கிட்டானுங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் காப்பியா?…

சல்லி சல்லியா நொறுக்கிட்டானுங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் காப்பியா?…

News, Tamil News
கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் சோழர் பரம்பரை பற்றியதாக இருந்ததால் ரசிகர்களுக்கு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தை கொடுத்தது. இந்நிலையில், 10 வருடங்களுக்கு பின் இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில், தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த செய்தியை செல்வராகவனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக செல்வராகவன் வெளியிட்டுள்ள போஸ்டர் Mathieu lauffrary என்கிற புத்தக அட்டைப்படம் போல உருவாக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் செல்வராகவனை ட்ரோல் செய்து வருகின்றனர்....
செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’- மாஸ் அறிவிப்பு…

செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’- மாஸ் அறிவிப்பு…

News, Tamil News
கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் சோழர் பரம்பரை பற்றியதாக இருந்ததால் ரசிகர்களுக்கு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தை கொடுத்தது. இந்நிலையில், 10 வருடங்களுக்கு பின் இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில், தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த செய்தியை செல்வராகவனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....
மீண்டும் இணையும் செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்…

மீண்டும் இணையும் செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்…

News, Tamil News
துள்ளுவதோ இளமை மூலம் செல்வராகவன் - தனுஷ் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி துவங்கியது. அப்படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்து ரசிகர்களை சுண்டி இழுத்தது. அடுத்து 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் என இந்த கூட்டணி பல அற்புதமான பாடல்களை கொடுத்துள்ளது. இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த கூட்டணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.     View this post on Instagram   A post shared by Selvaraghavan (@selvaraghavan) ...