
நடிகையை மணக்கும் இளம் இயக்குனர் – சினிமா உலகினர் வாழ்த்து…
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்தியாசமான திரைக்கதையை கொண்ட இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் இயக்குனர் ஒரு தீவிர ரஜினி ரசிகனும் கூட. இப்படத்தை பார்த்து தேசிங்கு பெரியசாமியை ரஜினியே பாராட்டினார்.
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்த நிரஞ்சனியை அவர் திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடக்கவுள்ளது. மேலும், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது முழுக்க முழுக்க பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் ஆகும்.....