web analytics
Saturday, February 4SOCIAL MEDIA

Tag: Easwaran

மாஸ் காட்டும் சிம்பு… லைக்ஸ் குவிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

மாஸ் காட்டும் சிம்பு… லைக்ஸ் குவிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

News, Tamil News
சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சிம்பு மாநாடு மற்றும் பத்து தல எனும் 2 படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மட்டுமில்லாமல் கௌதம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரியா பவானி சங்கரும் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.   #PathuThala #ObelinKrishna #Studiogreen#SilambarasanTR45 #studiogreen20#pathuthalai #pathuthalaiofficial#STR#SilambarasanTR #GauthamKarthik #Priyabhavanishankar #Teejay pic.twitter.com/4gwKtXGTpK — Silambarasan TR (@SilambarasanTR_) January 18, 2021 ...
தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு! – ஈஸ்வரன் வெளியாகுமா?

தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு! – ஈஸ்வரன் வெளியாகுமா?

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை காண சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், 14ம் தேதி இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் ஓடிடியில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய விருப்பமில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டு ஈஸ்வரன் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....
சிம்பு ரசிகர்களுக்கு செம பொங்கல்!…ஈஸ்வரன் பட டிரெய்லர் அப்டேட்..

சிம்பு ரசிகர்களுக்கு செம பொங்கல்!…ஈஸ்வரன் பட டிரெய்லர் அப்டேட்..

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை காண சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் டீசர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், தற்போது வரை டிரெய்லர் வீடியோ வெளியாகவில்லை. தற்போது தியேட்டரில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால், விரைவில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகும் எனத்தெரிகிறது. அநேகமாக வருகிற 9ம் தேதி ஈஸ்வரன் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகும் என கருதப்படுகிறது. இந்த செய்தி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது....
என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்க!… விஜய் ரசிகர்களிடமிருந்து தப்பித்த சிம்பு…

என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்க!… விஜய் ரசிகர்களிடமிருந்து தப்பித்த சிம்பு…

News, Tamil News
பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும், 14ம் தேதி சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. வழக்கமாக விஜய், அஜித் படம் வெளியாகும் வேறு பெரிய நடிகர் படம் வெளியானால், சமூக வலைத்தளங்களில் விஜய் & அஜித் ரசிகர்கள் அந்த நடிகர் மற்றும் படத்தை கடுமையாக விமர்சிப்பார்கள். விஸ்வாசம் வெளியான போது ரஜினி நடித்த பேட்டை படமும் வெளியானது. எனவே, அஜித் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் என் ஈஸ்வரன் பாருங்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு நெகிழ்ந்து போன விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக ஈஸ்வரன் படத்தை பார்ப்போம் என தெரிவித்து வருகின்றனர்.   #Master #Eeswaran #SpreadLove 🙏🏻 pic.twitter.com/g6SOq1a1uE — Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021 ...