web analytics
Wednesday, November 23SOCIAL MEDIA

Tag: Geetanjali

செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு மீண்டும் ஆண் குழந்தை…

செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு மீண்டும் ஆண் குழந்தை…

News, Tamil News
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஓம்கார் என்கிற மகனும்,லீலாவதி என்கிற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பது வெளியே தெரிந்தது. கர்ப்பிணியாக இருக்கும் கீதாஞ்சலியின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....