web analytics
Monday, November 28SOCIAL MEDIA

Tag: iman

2வது திருமணம் செய்து கொள்கிறாரா இமான்…உண்மை நிலவரம் என்ன?…

2வது திருமணம் செய்து கொள்கிறாரா இமான்…உண்மை நிலவரம் என்ன?…

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் டி. இமான். விஸ்வாசம் படத்தில் அவர் இசையமைத்த கண்ணான கண்ணே பாடலுக்கு தேசிய விருதையும் பெற்றார். ரஜினியின் அண்ணாத்த படத்திற்கும் இசையமைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது மனைவி மோனிகாவை பிரிவதாக அறிவித்தார். மேலும், எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பு கொடுங்கள் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அந்த பெண்ணின் பெயர் உமா எனவும் செய்திகள் வெளியானது. இதுபற்றி விளக்கமளித்துள்ள இமானின் தந்தை ‘அந்த செய்தியில் உண்மை இல்லை. எந்த விஷயத்தையும் இமான் வெளிப்படையாக அறிவிப்பவர். விவாகரத்து பற்றி எப்படி சொன்னாரோ அதுபோல் திருமணம் நடந்தால் அது பற்றியும் அவரே அறிவிப்பார்’ என தெரிவித்தார்....