
பாபநாசம் 2 உருவாக வாய்ப்புண்டா? – இயக்குனர் ஜீத்து ஜோசப் பேட்டி
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து அப்படம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும், மோகன்லால், மீனா உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே, பாபநாசம் 2 உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்த ஜீத்து ஜோசப் ‘கமல் விரும்பினால் பாபநாசம் 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்’ என பதிலளித்துள்ளார்....