web analytics
Thursday, June 30SOCIAL MEDIA

Tag: malayala cinema

மலையாள நடிகை லலிதா காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி…

மலையாள நடிகை லலிதா காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி…

News, Tamil News
நாடக நடிகையாக தனது நடிப்பு பயணத்தை துவங்கி மலையாளத்தில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லலிதா. இவரை KPAC லலிதா என திரையுலகில் அழைப்பார்கள். இவர் 1969ம் ஆண்டு திரையுலகில் நடிக்க துவங்கினார். மலையாலத்தில் குணச்சித்திர நடிகையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு இவர் மரணமடைந்தார். இவருக்கு வயது 74. இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்....
படப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…

படப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…

News, Tamil News
மலையாளத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஃபகத் பாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ‘மலையன் குஞ்சு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தி படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது. இப்படத்திற்காக சண்டைக்காட்சியை படக்குழு படம்பிடித்து வந்தது. அப்போது பகத் பாசில் உயரத்திலிருந்து குதிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பகத் பாசில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரின் முகத்தின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. எனவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்....