
வசூல் மன்னனாக மாறிய விஜய்….ரூ.200 கோடியை தொட்ட மாஸ்டர் வசூல்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது.
பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆனநிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.
தற்போது படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ரூ.200 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #MasterEnters200CrClub என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
After #Mersal #Sarkar #Bigil now 4th consecutive film of #ThalapathyVijay too breach the world wide gross 200cr mark ! Des...