
அஜித் 61 படத்தில் நடிக்க மறுத்த 2 சூப்பர் ஸ்டார்கள்.. அப்போ வாய்ப்பு யாருக்கு?…
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போனது. ஆனாலும், பிப்ரவரி 24ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த செய்தியை இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்யவில்லை.
ஒருபக்கம் அஜித்தின் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் பற்றி கருத்து தெரிவித்த வினோத் ‘இப்படத்தில் குறைவான சண்டை காட்சிகள், நிறைய வசனங்கள்...