
மிஷ்கின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா – பரபர அப்டேட்
வாலி மற்றும் குஷி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்பின் சில படங்களை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். அதன்பின் முழு நேர நடிகராக மாறினார்.
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள மாநாடு திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஏனெனில், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மனுஷன் கலக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது. எனவே, தனது சம்பளத்தையும் அவர் ஏற்றிவிட்டார். ஒரு படத்தை இயக்கும் முடிவில் இருந்த அவர் தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு இருந்ததால் அதை ஒத்தி வைத்துவிட்டார். சமீபத்தில் இவரை சமீபத்தில் சந்தித்த இயக்குனர் மிஷ்கின் ஒரு கதையை கூறியுள்ளாராம். எனவே, விரைவில் அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாகவும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்திகள் கசிந்துள்ளது....