
தேசிய விருதுகள் அறிவிப்பு : சிறந்த திரைப்படம் அசுரன்.. சிறந்த நடிகர் தனுஷ்…
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு வருடத்திற்கும் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்தியாவில் தயாராகும் அனைத்து மொழி திரைப்படங்களும் பல பிரிவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழை பொறுத்தவரை சிறந்த திரைப்படமாக அசுரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்படத்தில் நடித்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும், பார்த்தின் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ஜூரி விருதும், விஸ்வாசம் படத்தில் இசையமைத்த இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....