web analytics
Saturday, November 26SOCIAL MEDIA

Tag: nenjam marappathillai

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் – எதற்கு தெரியுமா?…

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் – எதற்கு தெரியுமா?…

News, Tamil News
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி. வீட்டு வேலைக்கு வரும் இளம்பெண் மீது காம வயப்படும் நபர் போல் அவரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரு பேட்டியில் ‘பெரியாரை மனதில் வைத்து எஸ்.ஜே சூர்யாவுக்கு ராமசாமி என பெயர் சூட்டினீர்களா?’ என நெறியாளர் கேட்க, செல்வராகவன் யோசித்து ‘ஆமாம்’ என சொல்லிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் செல்வராகவனை திட்டி தீர்த்தனர். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள செல்வராகவன் ‘நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.’ என பதிவிட்டுள்ளார்....
நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகுமா? – நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகுமா? – நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

News, Tamil News
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாவதாக் அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கும்படி ரேடியன்ஸ் மீடியா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு ரூ.1.24 கோடி பாக்கி வைத்திருப்பதால் படத்திற்கு தடை விதிக்கும் படி தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது....
படம் கண்டிப்பா மிரட்டும்! – ரசிகர்களை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக் வீடியோ…

படம் கண்டிப்பா மிரட்டும்! – ரசிகர்களை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக் வீடியோ…

News, Sneak Peek, Tamil News, Videos
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.   ...
ஒரு வழியாக வெளியாகும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

ஒரு வழியாக வெளியாகும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

News, Tamil News
2017ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான பேய் திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரஜினி கேஸந்த்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. தற்போது 4 வருடம் ஆகிவிட்ட நிலையில் மார்ச் மாதம் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது....