
யுடியூப்பில் ‘ஓ சொல்றியா’ பாடல் செய்த சாதனை…
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. முதன் முறையாக அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என 4 மொழிகளில் வெளியானது.
எனவே, இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே, இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. முதல் நாளே இப்படம் ரூ.71 கோடி வசூல் செய்து 2021ம் ஆண்டு அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. ஒருபக்கம் இப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக சமந்தா நடனம் ஆகியுள்ள ‘ஓ சொல்றியா’ பாடல் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக மாறியுள்ளது. ஒருபக்கம் இப்பாடல் சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பையும் சந்தித்தது. ஆனாலும், இப்படம் ஹிட் அடித்துள்ளது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா எழுதியுள்ளார். சமீபத்தில் இப்பாடல் யுடியூப்பில் பதிவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ப...