
வசூலை குவிக்கும் பேன் இண்டியா திரைப்படங்கள்… ஹிந்திக்கு போகும் விஜய், அஜித் படங்கள்….
பாகுபலி திரைப்படத்திற்கு பின் தெலுங்கில் உருவாகும் சில படங்கள் பேன் இண்டியா படங்களாக ரிலீஸ் ஆக துவங்கியுள்ளது. அதாவது ஒரு திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் ,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனால் அது பேன் இண்டியா திரைப்படம். அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ பேன் இண்டியா ஹீரோ என அழைக்கப்படுகிறார்கள்.
பாகுபலிக்கு பின் கேஜிஎஃப் திரைப்படம் அப்படி பேன் இண்டியா படமாக வெளியாகி ஹிட் அடித்தது. அதேபோல், அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படமும் 5 மொழிகளில் உருவாகி ஹிட் அடித்து ரூ.350 கோடி வரை வசூல் செய்துள்ளது. எனவே, அனைத்து மொழி நடிகர்களும் பேன் இண்டியா ஹீரோவாக மாற ஆசைப்பட துவங்கியுள்ளனர்.
தனுஷ் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழில் டப் செய்யப்படவுள்ளது. அதேபோல், சிவகார்த்திகேயனும் தெலுங்கு, தமிழ் என 2 மொழிகளிலும் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
...