web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: periyar issue

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் – எதற்கு தெரியுமா?…

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் – எதற்கு தெரியுமா?…

News, Tamil News
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி. வீட்டு வேலைக்கு வரும் இளம்பெண் மீது காம வயப்படும் நபர் போல் அவரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரு பேட்டியில் ‘பெரியாரை மனதில் வைத்து எஸ்.ஜே சூர்யாவுக்கு ராமசாமி என பெயர் சூட்டினீர்களா?’ என நெறியாளர் கேட்க, செல்வராகவன் யோசித்து ‘ஆமாம்’ என சொல்லிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் செல்வராகவனை திட்டி தீர்த்தனர். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள செல்வராகவன் ‘நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.’ என பதிவிட்டுள்ளார்....