
விவசாயிகளுக்கு பலன் கொடுக்க கூடிய வேளாண் பட்ஜெட் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை
விவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை
வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் கூறியுள்ளார்.
இது குறித்து பவன் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்:
“தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தொடர்ந்து பல கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது. அதில் பலவற்றை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கான தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....