
பொங்கலை சிறப்பாக கொண்டாடிய மாஸ்டர் டீம்.. லைக்ஸ் குவிக்கும் வீடியோ…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது.
பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வருடம் பொங்கல் விழாவின் போது படப்பிடிப்பு தளத்தில் மாஸ்டர் டீம் கொண்டாடியது. இந்த விழாவில் விஜய், மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த வீடியோவைத்தான் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. முழு வீடியோ விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.
Here's a glimpse o...