
கோடிகளில் புரளும் கோலிவுட்!…டாப் நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ!…
பொதுவாக உலகமெங்குமே சினிமா நடிகர்களுக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவிப்பதால் ஹாலிவுட் பட நடிகர்களுக்கு பல மில்லியன் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை ஹிந்தி படங்களுக்கு அதிக மார்க்கெட் இருப்பதால் பாலிவுட் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுறது. அதன்பின் கோலிவுட் என அழைக்கப்படும் தமிழ் சினிமா உலகில்தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
பல வருடங்களாகவே அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் நடிகர் ரஜினி இருந்தார்.அவருக்கு பின் கமல்ஹாசன் இருந்தார். ஆனால், விஜய்,அஜித் வந்த பின் எல்லாம் மாறிவிட்டது. விஜய் தற்போது ரஜினியின் சம்பளத்தை நெருங்கிவிட்டார். அவ்வளவு ஏன் ரஜினியின் சம்பளத்தையே அவர் தாண்டிவிட்டார்.
ரஜினி ரூ. 105 கோடி சம்பளம் பெறும் நிலையில், விஜய் தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்திற்...