web analytics
Thursday, December 8SOCIAL MEDIA

Tag: tamil cinema

மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – அதிரும் இணையதளம்

மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – அதிரும் இணையதளம்

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டரில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பொங்கல் விருந்தாக இப்படம் வெளியாகிறது எனவும், தள்ளிப்போகிறது எனவும் செய்திகள் மாறி மாறி வெளிவந்தது. இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 600 தியேட்டர்கள் இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   Aana aavanna apna time na Vanganna vanakkamna Ini #VaathiRaid na! 🔥#Vaathicoming to theatres near you on January 13. #Master #மாஸ்டர்#మాస్టర్#VijayTheMaster #MasterPongal #MasterOnJan13th pic.twitter.com/RfBqIhT95U — XB Film Creators (@XBFilmCreators) December 29, 2020 ...
படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா – அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தம்

படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா – அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தம்

News, Tamil News
பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. எனவே, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும், தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.     Announcement : During routine testing at #Annaathe shoot 4 crew members have tested positive for Covid19. Superstar @rajinikanth and other crew members have tested negative. To ensur...
லீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… படம் சும்மா தெறிக்குதாம்!…

லீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… படம் சும்மா தெறிக்குதாம்!…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.   இந்நிலையில், இப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அதிகாரிகளிடம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படம் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதாக தெரிவித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், படத்திற்கு யு/ஏ சான்றிதழை கொடுக்க அவர்கள் முன்வந்தனர். ஆனால், படக்குழு யூ சான்றிதழை கேட்க, 9 இடங்களில் வெட்டு கொடுத்துவிட்டு யூ தருகிறோம் என கூறியுள்ளனர். அதை லோகேஷ் கனகராஜ் ஏற்கமாட்டார் என்பதால் மாஸ்டர் யூ/ஏ சான்றிதழோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகைகள் வேண்டும் என ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் சில மாடல் மற்றும் நடிகைகளிடம் மேசேஜ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ‘என் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதை கடுமையாக கண்டிக்கிறேன். என்னுடைய பேனர் தயாரிக்கும் படங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் புகார் கொடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.   To all aspiring actresses Please beware of such people who are trying to misuse my name for wrong reasons. I strongly condemn such people and such nonsense. Also i am not doing any movie outside my own banner at the moment. Its an instagram id. Will file a comp...