Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

Tag: telugu cinema

என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

News, Tamil News
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. தற்போது சகுந்தலம் என்கிற புராண படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சகுந்தலை வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இப்படத்தை ருத்ரமா தேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜையில் சமீபத்தில் சமந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய சமந்தா ‘நான் இதுவரை 50 படங்களில் நடித்துவிட்டேன். கதாநாயகி, வில்லி, ஆக்‌ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போதுதான் அது நிறைவேறியுள்ளது. இந்த கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகியுள்ளது. இப்படத்திற்கு 100 சதவீதம் உழைப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்....
சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

News, Tamil News
தமிழிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் அனுஷ்கா. திடீரென ஒரு திரைப்படத்திற்காக குண்டாக மாறினார். அதன்பின் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். தற்போது ஆண்டி உருவத்திற்கு மாறியுள்ள அனுஷ்கா கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காதலை மையமாக கொண்டு உருவாகும் புதிய தெலுங்கு படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை மகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்கவுள்ளார்....
தெலுங்கில் உருவாகும் திரிஷ்யம் 2 – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?..

தெலுங்கில் உருவாகும் திரிஷ்யம் 2 – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?..

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து அப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும், மோகன்லால், மீனா உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, தமிழில் பாபநாசம் 2 உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்த ஜீத்து ஜோசப் ‘கமல் விரும்பினால் பாபநாசம் 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்’ என பதிலளித்துள்ளார். அதேநேரம் தெலுங்கில் இப்படம் உருவாவது உறுதியாகியுள்ளது. மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளனர். வழக்க...
தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – உப்பெனா எவ்வளவு வசூல் தெரியுமா?..

தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – உப்பெனா எவ்வளவு வசூல் தெரியுமா?..

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகமும் அவரை அழைத்து அங்கு நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில் புது முக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பெனா என்கிற படத்தில் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 12ம் தேதி ஆந்திராவில் வெளியானது. இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து 3 நாளில் ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது....
ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… அதிரும் இணையதளம்…

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… அதிரும் இணையதளம்…

News, Tamil News
தெலுங்கில் சில படங்களை இயக்கிய ராஜம்வுலி பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் விரும்பினர். தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து புதிய படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்து வருகின்றனர். பிரம்மாண்ட செலவில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் இந்த வரும் அக்டோபர் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ராம் சரண் குதிரை ஓட்டுவது போலவும், ஜூனியர் என்.டி.ஆர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போலவும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து #RRRFestivalOnOct13th என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.   Witness the unstoppable force of fire and water on October 1...