web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: Vanitha vijayakumar

பிரசாந்த படத்தில் வனிதா விஜயகுமார் – பரபர அப்டேட்

பிரசாந்த படத்தில் வனிதா விஜயகுமார் – பரபர அப்டேட்

News, Tamil News
பாலிவுட்டில் ஹிட் ஆன அந்தாதூண் திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய நடிகர் தியாகராஜன் அதை அவரின் மகனும், நடிகருமான பிரசாந்தை வைத்து உருவாக்க முடிவெடுத்தார். இப்படத்திற்கு ‘அந்தகன்’ என தலைப்பு வைக்கப்பட்டது. முதல் இப்படத்தை இயக்க பேசப்பட்டவர் மோகன் ராஜா. அதன் பின் திடீரென அவர் விலகினார். அவருக்கு பின் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜே.ஜே. பெட்ரிக் இயக்க முன் வந்தார். அதன் பின் அவரும் விலக தற்போது இப்படத்தை தானே இயக்குவது என முடிவெடுத்துள்ளார் தியாகராஜன். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, சிம்ரன் இப்படத்தில் நடிப்பது உறுதியானது. இப்படம் தொடர்பாக சில புகைப்படங்களை பிரசாந்த் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்....
ஹரி நாடாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார்…

ஹரி நாடாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார்…

News, Tamil News
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். அவரின் சொந்த வாழ்க்கை மிகவும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் ஒன்றாக மாறும் அளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து வருபவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதற்கு உதவியாக இருந்த பீட்டார் பால் என்பவரை திருமணம் செய்து அவரையும் பிரிந்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பனங்காட்டுப்படை என்கிற அரசியல் கட்சியை நடத்தி வரும் ஹரி நாடார் இதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முத்தமிழ் வர்மா என்பவர் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘2K அழகானது ஒரு காதல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது. இந்த விழாவில் ஆர்.பி.சவுத்ரி உள்ளிட்ட பலரும...
மீண்டும் சினிமாவில் வனிதா விஜயகுமார் – ஒரு ரவுண்டு வருவாரா?…

மீண்டும் சினிமாவில் வனிதா விஜயகுமார் – ஒரு ரவுண்டு வருவாரா?…

News, Tamil News
ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் 3வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், அவரையும் பிரிந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட வனிதா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார். பாம்பு சட்டை பட இயக்குனர் ஆடம் தாசன் இயக்கும் அடுத்த படத்தில் வனிதா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது....