web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: vikram vollection

ரஜினி, விஜயை ஓவர்டேக் செய்த கமல்!…சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….

ரஜினி, விஜயை ஓவர்டேக் செய்த கமல்!…சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….

News, Tamil News
நடிகர் கமல்ஹாசன் கடந்த 55 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு பின் நடிக்கவந்த நடிகர் ரஜினி சூப்பர்ஸ்டாராக மாறி அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு பல வருடங்களுக்கு முன்பே உயர்ந்துவிட்டார். ரஜினியை ஒப்பிட்டால் கமலுக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களில் ரஜினி ரூ.100 கோடி சம்பளத்தை நெருங்க கமலோ திரைப்படங்களில் நடிக்காமல் பிக்பாஸ், அரசியல் என வேறுபக்கம் ஒதுங்கினார். கமலின் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதான் முடிவுக்கு வந்துவிட்டது என ரசிகர்கள் மட்டுமில்லாமல் நினைத்தனர். ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்துள்ளது. இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்கிற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது. 25 நாட்களுக்கு மேலும் இப்படம...