thalaivar

பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி நடிக்கும் ஒரு புதிய படம் உருவாகவுள்ளது.

சிறையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் கதை என்பதால் இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்குக்கு முன்பே செய்திகள் வெளியானது.

தற்போது அந்த செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் அடுத்த படத்திற்கு ஜெயிலர் என்கிற தலைப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெரிய கத்தியில் ரத்தக்கறை படிந்திருப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

thalaivar