web analytics
Monday, October 3SOCIAL MEDIA

தளபதி 65 ஷூட்டிங்கில் பெரிய மாற்றம் – அப்செட்டில் விஜய் ரசிகர்கள்

மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் தற்போது டாக்டர் படத்தின் இறுதி கட்ட வேலையில் பிஸியாக இருக்கிறார். மார்ச் மாதம் டாக்டர் படம் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே விஜய் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குவதாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் பட பணிகள் காரணமாக தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் அல்லது ஜூலையில் படப்பிடிப்பை முடித்து 2021 தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால்,தீபாவளிக்கு அண்ணாத்தே படம் வெளியாவதால் 2022 பொங்கல் பண்டிகையின் போது இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

%d bloggers like this: