விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 8 மாதங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை கொடுத்தது. அதேநேரம் படம் வெளியாகி 2 வாரம் ஆன நிலையில், தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அமேசான் பிரைமுக்கு படத்தை விற்றார் தயாரிப்பாளர். இது திரையரங்க அதிபர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது.
எனவே, ஒரு புதிய கட்டுப்பாட்டை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். அதன்படி, சிறிய பட்ஜெட் படங்கள் எனில் படம் வெளியாகி 30 நாட்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும். அதேபோல், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படம் எனில் படம் வெளியாகி 50 நாட்கள் கழித்தே ஓடிடி தளத்திற்கு கொடுக்க வேண்டும் என விதிமுறையை அமுல்படுத்தியுள்ளனர்.
வருங்கலாத்தில் தயாரிப்பாளர்கள் இதை கடைபிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.