தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் என இரண்டு படங்களுமே வசூலை வாரி குவித்தது. தற்போது அயலான், பிரின்ஸ் என 2 திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இதில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த வெளிநாட்டு நடிகை நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்டு 31ம் தேதி என அறிவிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டது.
ஆனால், திடீரென இப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல் ரிலீஸ் என்றாலே அது ஸ்பெஷல்தான். மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் என இரண்டு திரைப்படங்களுமே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
எனவே, அந்த செண்டிமென்ட் தனது பிரின்ஸ் திரைப்படத்திற்கும் ஒர்க் அவுட் ஆகும் என சிவகார்த்திகேயன் கருதுகிறாராம்.
சினிமாவுல செண்டிமெண்டுக்கு பஞ்சம் இல்லை…