விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது ரூ.30 கோடி சம்பளம் பெற்ற நடிகராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன்.
மெரினா படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே. தற்போது நடிக்கும் தெலுங்கு படத்திற்கு அவர் 27 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கும் ரூ.25 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருபக்கம் அவரின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போதும் தயாரிப்பாளர் கடன் வாங்கிய பஞ்சாயத்துக்களுக்கு சிவகார்த்திகேயன் பொறுப்பேற்று பொறுப்பேற்று பட கோடிகளுக்கு கடனாளி ஆகிவிட்டார். எனவேதான் தற்போது பஞ்சாயத்து வராத தயாரிப்பாளராக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு ரூ.98 கோடி என்கிற செய்தி திரையுலகில் கசிந்து வருகிறது. விரைவில் அவரின் சொத்து மதிப்பு ரூ.100 கோடியை தாண்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.