லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் கதை தற்போது வெளியே கசிந்துள்ளது. விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை எப்படியாவது ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர வில்லன் கும்பல் பஹத்பாசிலை சிறைக்குள் அனுப்புகிறது.

இதை தெரிந்து கொண்ட போலீஸ் அதிகாரியான கமல்ஹாசன் அவரும் சிறைக்குள் சென்று பஹத் பாசிலின் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை எனக்கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள் நடப்பது போலவே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.