பாலிவுட்டில் ஹிட் ஆன அந்தாதூண் திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய நடிகர் தியாகராஜன் அதை அவரின் மகனும், நடிகருமான பிரசாந்தை வைத்து உருவாக்க முடிவெடுத்தார். இப்படத்திற்கு ‘அந்தகன்’ என தலைப்பு வைக்கப்பட்டது. முதல் இப்படத்தை இயக்க பேசப்பட்டவர் மோகன் ராஜா.
அதன் பின் திடீரென அவர் விலகினார். அவருக்கு பின் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜே.ஜே. பெட்ரிக் இயக்க முன் வந்தார். ஆனால், அவரிடமும் தியாகராஜா தன் வேலையை காட்ட அவரும் விலகிவிட்டாராம்.
மேலும், இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் விலகிவிட்ட, தற்போது இப்படத்தை தானே இயக்குவது என முடிவெடுத்துள்ளாராம்.