theatre

தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதேபோல் நடிகர் சிம்புவும் டிவிட்டரில் கோரிக்கை விடுத்தார். அதன்பின் 100 சதவீதம் இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலைஇல், அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தமிழக அரசீன் முடிவுக்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வெளிவரும் வரை 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.