ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். அதன்பின் சில வருடங்களுக்கு பின் இந்தியன் 2 படம் உருவாதாக அறிவிக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்க, லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முக்கியமாக, லைக்கா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டனர்.

indian

அதன்பின் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என பிஸி ஆனார். ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க சென்றுவிட்டார்.எனவே, இந்தியன் 2 திரைப்படம் வெளிவருமா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது.

இந்நிலையில், இந்தியன் 2 பட வேலைகள் மீண்டும் துவங்கும் என சமீபத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். அதேபோல், உதயநிதி ஸ்டாலினும் தற்போது இதை உறுதி செய்துள்ளார். லைக்கா தயாரிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் திரைப்படம் ஹிட் அடித்துள்ள இந்லையில், இந்தியன் 2 துவங்கும் என்கிற செய்தி கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.