web analytics
Thursday, September 29SOCIAL MEDIA

விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

vijay

பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் தற்போது தெலுங்கு-தமிழ் மொழிகளில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கும் அவரின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிப்பாகத்தான் கூறப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பெயர் அடிபடுகிறது.

vijay

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் திரைப்படம் தற்போது பல புதிய திரைப்படங்களை வினியோகம் செய்து வருகிறது. தற்போத மீண்டும் புதிய படங்களை தயாரிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே விஜய் நடித்த குருவி படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: