தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை,வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவரும் சூர்யாவும் வாடிவாசல் என்கிற படத்தில் இணையவதாக கடந்த வருடமே செய்திகள் வெளியானது.
இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை அடிப்படையாக கொண்டது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டெஸ்ட் ஷூட் எடுக்கும் வேலையில் வெற்றிமாறன் இறங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது