தனது காமெடி மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. பல வருடங்களுக்கு பின் சுராஜின் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக இப்படத்தின் இயக்குனர் சுராஜ், வடிவேல் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் லண்டன் சென்றனர்.
லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, சென்னை போரூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பின் சுராஹுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், வடிவேலுவுன் உடல் நிலை தொடர்பான செய்தி வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் ‘வடிவேலு கடந்த 23ம் தேதி கோவிட் பாசிட்டிவுடன் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.